/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
13 கிராமங்களில் இலவச 'டியூஷன்' சொந்த செலவில் நடத்தும் ஆடிட்டர்
/
13 கிராமங்களில் இலவச 'டியூஷன்' சொந்த செலவில் நடத்தும் ஆடிட்டர்
13 கிராமங்களில் இலவச 'டியூஷன்' சொந்த செலவில் நடத்தும் ஆடிட்டர்
13 கிராமங்களில் இலவச 'டியூஷன்' சொந்த செலவில் நடத்தும் ஆடிட்டர்
ADDED : ஜன 04, 2026 06:20 AM

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி உப்கார் லே அவுட்டை சேர்ந்தவர் கவுரி, 33; எம்.காம்., - எம்.எஸ்.டபிள்யு பட்டதாரியான இவர், ஆடிட்டராக பணியாற்றி வருகிறார்.
இவர், 2019 முதல் 'அன்பு செய்வோம் அறக்கட்டளை' நடத்தி வருகிறார். ஆடிட்டர் தொழிலில் கிடைக்கும் வருமானத்தில், சமூக பணிகளை செய்கிறார்.
கடந்த, 2021ல், 'அன்பு செய்வோம் அறக்கட்டளை' மூலம், 'பயில் அகம்' என்ற பெயரில், மலை கிராம ஏழை, எளிய அரசு பள்ளி மாணவ - மாணவியரின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில், மாலை நேர வகுப்புகள் நடத்தி வருகிறார்.
கிருஷ்ணகிரி, சூளகிரி, ராயக்கோட்டை சுற்றுப்புறங்களில் சின்னகுத்தி, சிகரலப்பள்ளி உட்பட, 13 கிராமங்களில், தற்போது மாலை நேர வகுப்புகள் நடக்கின்றன.
இதன் மூலம் அரசு பள்ளி மாணவ - மாணவியர், 220க்கும் மேற்பட்டோர் பயனடைகின்றனர். கவுரியின், 'பயில் அகம்' திட்டத்தை பாராட்டி, கடந்தாண்டு ஆக., 15ல் சுதந்திர தின விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலின், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், 'சிறந்த சமூக சேவை'க்கான முதல்வரின் மாநில இளைஞர் விருதை வழங்கியுள்ளார்.
கவுரி கூறியதாவது:
வெளியூரிலிருந்து நபர்களை வரவழைத்து, மாலைநேர வகுப்புகள் நடத்துவது சிரமம். மேலும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறி. அதனால், அதே கிராமத்தில் படித்த பெண்களை தேர்வு செய்து, அவர்கள் மூலமாக, மாலை நேர வகுப்புகளை நடத்துகிறோம்.
இதன் மூலம், அரசு பள்ளி மாணவ - மாணவியரின் கல்வித்தரம் உயர்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற ஆறு நாட்களும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இதற்காக நியமிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு, 'அன்பு செய்வோம் அறக்கட்டளை' மூலம் மாதந்தோறும் தலா, 2,000 ரூபாய் ஊதியம் வழங்குகிறோம். பல கிராமங்களில், மாலை நேர வகுப்புகளை துவங்க திட்டமிட்டுஉள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

