பாம்பன் அருகே ஆட்டோ, சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து:2 பேர் பலி
பாம்பன் அருகே ஆட்டோ, சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து:2 பேர் பலி
ADDED : ஜூலை 28, 2025 08:38 PM

ராமநாதபுரம்:பாம்பன் அருகே ஆட்டோவும் சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்தில் இருவர் பலியாகினர். ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார்.
ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்து கொண்டிருந்த ஆட்டோ பாம்பன் அடுத்த அக்காள்மடம் பகுதியில் மதுரை தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது ஆட்டோ முன்னே வந்த வாகனத்தை முந்த முயன்றுள்ளது.
அப்போது ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற சரக்கு வாகனத்தின் மீது ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்ப்பட்டது.
இந்த விபத்தில் ஆட்டோவில் வந்த சரவணன், பாதேஸ்வரன் ஆகிய இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
மேலும் ஆட்டோவில் வந்த மற்றொருவர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த பேக்கரும்பு பகுதியை சேர்ந்த மணி என்பவர்கள் காயங்களுடன் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.