தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பெண்ணுக்கு தொல்லை ஆட்டோ டிரைவர் கைது

பெண்ணுக்கு தொல்லை ஆட்டோ டிரைவர் கைது

பெண்ணுக்கு தொல்லை ஆட்டோ டிரைவர் கைது


UPDATED : நவ 03, 2026 01:59 AM

ADDED : நவ 03, 2026 01:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2026 01:59 AM ADDED : நவ 03, 2026 01:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆம்பூர்: ஆம்பூரில், ஆட்டோவில் பயணித்த பெண்ணை தனிமையில் இருக்க அழைத்த ஆட்டோ டிரைவர் சரவணன், 46, கைது செய்யப்பட்டார்.

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சரவணன். இவரது ஆட்டோவில், 7 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, தற்போது விவாகரத்து பெற்று வாழும், 26 வயது பெண், சில நாட்களுக்கு முன் பயணம் செய்தார்.

அந்த பெண்ணிடம், சரவணன் தனிமையில் இருக்க அழைத்துள்ளார். மேலும், ‘நீ அழகாக இருக்கிறாய்; பாலியல் தொழிலில் ஈடுபட்டால் நல்ல பணம் கிடைக்கும்’ என கூறியுள்ளார். இதில், அதிர்ச்சி அடைந்த பெண், அவரது தந்தையிடம் கூறி அழுதுள்ளார்.

இதுகுறித்து, ஆம்பூர் டவுன் போலீசில், அந்த பெண் நேற்று புகார் செய்தார். போலீசார் விசாரித்து, சரவணனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us