UPDATED : அக் 24, 2026 12:00 AM
ADDED : அக் 23, 2026 11:40 PM
சென்னை: பன்னாட்டு பாசனம் மற்றும் வடிகால் ஆணையம், 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பாசன கட்டமைப்புகளில், பாசன வேளாண்மை, பொறியியல் தொழில்நுட்பம், உணவு உற்பத்தி மற்றும் விவசாயிகளின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கிய கட்டமைப்புகளை தேர்வு செய்து, உலக பாரம்பரிய பாசன கட்டமைப்புகளாக அங்கீகரித்து வருகிறது.
அந்த வகையில், கன்னியாகுமரியில் 1906ல் கட்டப்பட்ட பேச்சிப்பாறை அணைக்கு, 2026ம் ஆண்டிற்கான உலக பாரம்பரிய பாசன கட்டமைப்பு விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.
பிரான்ஸ் நாட்டின் மார்செல் நகரில், கடந்த, 14ம் தேதி நடந்த விழாவில், விருது வழங்கப்பட்டது.
விருது மற்றும் சான்றித ழை, நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்திடம் காண்பித்து, நீர்வளத்துறை செயலர் பிரசாந்த் வடநேரே, முதன்மை தலைமை பொறியாளர் கோபாலகிருஷ்ணன், அணைகள் பாதுகாப்பு அமைப்பு தலைமை பொறியாளர் ரமேஷ், நாகர்கோவில் கோதையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் வசந்தி ஆகியோர் வாழ்த்து பெற்றனர்.
