ADDED : அக் 30, 2025 01:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ராஜலட்சுமி கல்விக் குழுமத்தின் தலைவர் தங்கம் மேகநாதனுக்கு, 'கல்வியாளார் லெகசி விருது' வழங்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆஸ்திரேலிய பல்கலை, சென்னை சஹோதயா பள்ளிகள் மற்றும் 'பிரிட்ஜிங் தி கேப்' அமைப்புகளின் சார்பில், 'தமிழ்நாடு லெகசி சம்மிட் 2025' எனும், தமிழக மரபாளர் மாநாடு, சென்னை, சஹோதயா பள்ளியில் நடத்தப்பட்டது.
அதில், தலைமுறைகள் தோறும் கற்றலின் மரபை வளர்த்தல் மற்றும் கல்வித்துறையில் வாழ்நாள் முழுதும் அர்ப்பணிப்புடன் பங்களித்தது ஆகியவற்றுக்காக, ராஜலட்சுமி கல்வி குழுமத்தின் தலைவர் தங்கம் மேகநாத னுக்கு, 'கல்வியாளர் லெகசி விருது' வழங்கப்பட்டது. போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக் குநர் அரவிந்தன், விருதை வழங்கினார்.

