சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்கிய விருதுகள்
சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்கிய விருதுகள்
UPDATED : ஆக 16, 2025 11:35 AM
ADDED : ஆக 16, 2025 01:50 AM
சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்கிய விருதுகள்:
தகைசால் தமிழர் விருது: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் காதர் மொய்தீன்.
அப்துல்கலாம் விருது: இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் நாராயணன்.
கல்பனா சாவ்லா விருது: மாற்றுத்திறனாளி பேட்மின்டன் வீராங்கனை துளசிமதி.
முதல்வரின் நல் ஆளுமை விருது: நாங்குநேரி உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார், தாசில்தார் பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் யமுனா; வீட்டு வசதித் துறை செயலர் காகர்லா உஷா, ஊரமைப்பு இயக்குநர் கணேசன்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் லட்சுமி பிரியா; ஆதிதிராவிடர் நல ஆணையர் ஆனந்த்; தாட்கோ இயக்குநர் கந்தசாமி; பழங்குடியினர் நல இயக்குநர் அண்ணாதுரை; தமிழ் இணைய கல்விக் கழக இணை இயக்குநர் கோமகன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில், விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில், கண்ணாடி பாலம் அமைத்ததற்காக, நெடுஞ்சாலைத்துறைக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான மிகச்சிறந்த சேவை விருது: திருச்சி மருத்துவர் குமரவேல் சண்முகசுந்தரம்; சேலம் மாவட்டம், எக்காம்வெல் மறுவாழ்வு மையம்.
சிறந்த சமூகப் பணியாளர் விருது: கோவையை சேர்ந்த குணசேகரன் ஜெகதீசனுக்கு வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணி அமர்த்தியதற்கான விருது: விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 'பெல் பிரின்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கான விருது: காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி.
கள அளவில் மிகச்சிறந்த சேவைக்கான விருது: பஹல்காம் தாக்குதலின்போது மீட்புப் பணியாற்றிய, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக இருந்த அப்தாப் ரசூலுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த சேவைக்காக சிறப்பாக தொண்டாற்றியவர்களுக்கான விருது: பாகீரதி ராமமூர்த்தி, ஓய்வு பெற்ற தாசில்தார் மாரிமுத்து, கருணாலயா அறக்கட்டளை, 'சொசைட்டி பார் எஜுகேஷன் வில்லேஜ் ஆக்சன் அண்டு இம்ப்ரூவ்மென்ட்' நிறுவனம்.
சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருதுகள்: சென்னை மாநகராட்சியில், முதல் பரிசு, ஆறாவது மண்டலத்திற்கும், இரண்டாம் பரிசு 13வது மண்டலத்திற்கும் வழங்கப்பட்டது.
சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசு ஆவடி மாநகராட்சிக்கும், இரண்டாம் பரிசு நாமக்கல் மாநகராட்சிக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த நகராட்சிக்கான முதல் பரிசு ராஜபாளையம், இரண்டாம் பரிசு ராமேஸ்வரம், மூன்றாம் பரிசு பெரம்பலுார் நகராட்சிகளுக்கு வழங்கப்பட்டது. சிறந்த பேரூராட்சிக்கான முதல் பரிசு காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், இரண்டாம் பரிசு திருச்சி மாவட்டம் காட்டுப்புதுார், மூன்றாம் பரிசு திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி, ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டது.
முதல்வரின் மாநில இளைஞர் விருதுகள்: ஆண்கள் பிரிவில் விழுப்புரத்தை சேர்ந்த சந்துருகுமார், திருநெல்வேலியை சேர்ந்த ஜெயகுமார், சேலத்தை சேர்ந்த பாரா தடகள வீரர் மாரியப்பன் ஆகியோருக்கும், பெண்கள் பிரிவில், சென்னையை சேர்ந்த கேரம் வீராங்கனை காஜிமா, கிராம அளவில் விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்கும் புதுக்கோட்டையை சேர்ந்த லாவண்யா, பழங்குடியின மாணவர்களை ஊக்குவிக்கும், கிருஷ்ணகிரியை சேர்ந்த கவுரி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
முதல்வரின் சிறப்பு விருது: டில்லியில் 2022, 2023, 2024ம் ஆண்டு நடந்த, மதநல்லிணக்க மலர் பேரணியில், முதல் பரிசு பெற்ற, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த, தமிழ்நாடு கிராமிய கலைகள் வளர்ச்சி மைய கலைக்குழுவின் ஒருங்கிணைப்பாளரான, மறைந்த ராஜ்குமாருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இதற்கான பாராட்டு சான்றிதழை, அவரது மனைவி கார்த்திகா பெற்றுக் கொண்டார்.