'விழிப்புணர்௸வு 63 சதவீதம் முதலீடோ 9.50 சதவீதம்'
'விழிப்புணர்௸வு 63 சதவீதம் முதலீடோ 9.50 சதவீதம்'
ADDED : நவ 16, 2025 01:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பங்குச் சந்தைகள் தொடர்பாக, முதலீட்டாளர்களுக்கு உள்ள விழிப்புணர்வுக்கும், அதில் அவர்கள் முதலீடு செய்வதற்கும் இடையே உள்ள இடைவெளியை குறைப்பது அவசியம் என, செபி தலைவர் துஹின் காந்த பாண்டே தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 63 சதவீத வீடுகளில், பங்குச் சந்தைகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அறிவு இருக்கிறது. ஆனால் அதில், 9.50 சதவீத வீடுகளில் மட்டுமே முதலீடு செய்வதாக, செபி மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதை, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலீடு செய்வதற்கு முன், மக்களுக்கு சந்தை மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதால், விழிப்புணர்வுக்கும், முதலீட்டிற்கும் இடையேயான இடைவெளியை குறைக்க வேண்டிய பொறுப்பு செபிக்கு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

