sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கடற்பசுக்களை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்: மாவட்ட வன அலுவலர்

/

கடற்பசுக்களை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்: மாவட்ட வன அலுவலர்

கடற்பசுக்களை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்: மாவட்ட வன அலுவலர்

கடற்பசுக்களை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்: மாவட்ட வன அலுவலர்


ADDED : மார் 01, 2024 09:20 PM

Google News

ADDED : மார் 01, 2024 09:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்:தஞ்சாவூரில் நேற்று தமிழ்நாடு வனத்துறை சார்பில், கடற்பசு பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் நடந்தது.

கருத்தரங்கத்தை மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி துவக்கி வைத்து பேசியதாவது:

உலகிலேயே மிகவும் அரிதான கடல்வாழ் பாலுாட்டி வகையைச் சேர்ந்த உயிரினம் கடற்பசு. தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம், மனோரா பகுதி, புதுக்கோட்டை மாவட்ட கடலோரப் பகுதியிலும், 150 எண்ணிக்கையில் இந்த அபூர்வ உயிரினம் உள்ளது.

இதனால், மத்திய - மாநில அரசுகள், இப்பகுதியை உலகின் முதல் கடற்பசு காப்பகமாக அறிவித்துள்ளது. இதற்காக தமிழக அரசு 90 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

அரிய புல் வகை


தனித்துவமிக்க உயிரினமான இந்த கடற்பசு வாழ்வதற்கு ஏற்புடைய சூழல் இங்கு அமைந்துள்ளது. ஆழம் குறைவான கடற்பகுதி, அலைகள் மிதமான கடலோரப்பகுதி, துாய்மை மிகு கடற்பகுதி, கடற்பசுக்கு உகந்த கடற்தாழை எனும் அரிய புல் வகையும் காணப்படுகிறது.

மேலும், இப்பகுதியில் கடற்பசு இனப்பெருக்கம் செய்யவும், குட்டிகளுக்கு பாலுாட்டு வதற்கும், இரையை உட்கொள்ளவும், தன் இனத்தை தக்கவைத்துக் கொள்ளும் பருவ சூழ்நிலையும் அமைந்து உள்ளது.

மீனவர்களின் வலைகளில் சிக்கியும், படகுகளில் மோதியும், பிளாஸ்டிக், கண்ணாடி பொருட்களால் கடற்பசுக்கள் ஆபத்தை சந்திக்கின்றன.

முக்கியத்துவம்


இதனால், கடற்பசு இனத்தைப் பாதுகாக்கவும், மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து கருத்தரங்கில், கடற்பசுக்கள் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து, தேசிய கடல் ஆராய்ச்சி மையத்தின் திட்ட விஞ்ஞானிகள் ருக்மினி ஷேகர், ஆனந்த் பாண்டே.

சத்தியபாமா கல்லுாரி கடல் ஆராய்ச்சித் துறை பேராசிரியர் அமித்குமார், ஓம்கார் பவுண்டேஷன் தன்னார்வ அமைப்பின் இயக்குனர் பாலாஜி, போலீஸ் எஸ்.பி., ஆஷிஷ் ராவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருத்தரங்கில், மனோரா பகுதியைச் சேர்ந்த மீனவப் பிரதிநிதிகளுக்கு, கடற்பசுக்களை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு கையேடுகளும், நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us