ஆதிபராசக்திக்கு பாலாபிஷேகம்; தி.மு.க., எம்.எல்.ஏ., பக்திப்பரவசம்
ஆதிபராசக்திக்கு பாலாபிஷேகம்; தி.மு.க., எம்.எல்.ஏ., பக்திப்பரவசம்
ADDED : செப் 23, 2024 06:40 AM

திருப்பூர் : திருப்பூர் ஓம் சக்தி கோவிலில் நடந்த ஆடிப்பூர விழாவில், தி.மு.க., எம்.எல்.ஏ., மற்றும் மேயர், கருவறைக்குள் சென்று சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
திருப்பூரில் உள்ள, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தின், 38ம் ஆண்டு ஆடிப்பூர பெருவிழா, ஓம் சக்தி கோவிலில் நேற்று நடந்தது. விழாவில், கஞ்சிக்கலய ஊர்வலத்தை தொடர்ந்து பொதுமக்கள் கருவறைக்குள் சென்று, ஆதிபராசக்திக்கு பாலாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
கோவிலில் வழிபாடு நடத்திய தி.மு.க.,வை சேர்ந்த, திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் மற்றும் இந்திய கம்யூ.,வை சேர்ந்த துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் பாலாபிேஷகம் செய்தனர்.
சட்டை அணியாமல் கருவறைக்குள் சென்ற அவர்கள், சிறிய குடங்களில் எடுத்துவந்த பாலில், பராசக்திக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.