ADDED : அக் 26, 2024 04:09 AM
சென்னை : 'விவசாய நிலங்களில் மின்வேலி அமைப்பது சட்டப்படி குற்றம்' என, தமிழக மின் வாரியம் எச்சரித்துள்ளது.
நீலகிரி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில், மலை மற்றும் வனப்பகுதிகளுக்கு அருகில் வசிப்போர், தங்களின் விவசாய நிலத்தில் விலங்குகள் நடமாட்டத்தை தடுக்க, முறைடோக மின் வேலிகள் அமைத்து வருகின்றனர். அதை தெரியாமல் தொடும் வன விலங்குகள், கால்நடைகள் மின் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றன. இதை தடுக்கும் நடவடிக்கையில் மின் வாரியம் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
விவசாய நிலங்களில், மின் வேலி அமைப்பது சட்டப்படி குற்றம். விவசாய நிலங்களில் மின்வேலி அமைத்தால், மின் இணைப்பு துண்டிக்கப்படும். விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மலை மற்றும் வனப் பகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களில், விவசாய நிலங்களில் முறைகேடாக மின் வேலி அமைக்கப்பட்டு இருக்கிறதா என, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.