ADDED : மார் 21, 2024 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு பஸ்களில் பார்சல்களை அனுப்பும் குத்தகையை தனியார் நிறுவனம் எடுத்துள்ள நிலையில், கண்டக்டரிடம் கட்டணம் செலுத்தி, பார்சல்களை அனுப்பும் நடைமுறை உள்ளது.
அதில் நகரங்கள் இடையே பார்சல்களை, ஆட்கள் இல்லாமலே அனுப்பும் வழக்கமும் உள்ளது.
லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், அரசு பஸ்களின் மூலம் பணப்பரிமாற்றம் செய்யப்படுவதை தடுக்க, தேவையான நடவடிக்கை மேற்கொள்ளும்படி தேர்தல் கமிஷன், போக்குவரத்துக் கழகங்களுக்கு உத்தரவிட்டது.
இதனால் அரசு பஸ்களில் ஆளில்லாமல் பார்சல்களை அனுப்பக் கூடாது என, டிரைவர், கண்டக்டர்களுக்கு, சுற்றறிக்கை மூலம் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
-- நமது நிருபர் -

