தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/வாழைக்கன்று கொடுத்து வரவேற்பு

வாழைக்கன்று கொடுத்து வரவேற்பு

வாழைக்கன்று கொடுத்து வரவேற்பு


UPDATED : நவ 04, 2026 12:00 AM

ADDED : நவ 03, 2026 11:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 12:00 AM ADDED : நவ 03, 2026 11:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த முதல்வர் விஜய், வேனில் செங்கப்பள்ளியில் இருந்து பெருந்துறைக்கு, ‘ரோடு ேஷா’ சென்றார். காலை, 11:30 மணிக்கு ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் டோல்கேட் வந்ததும், மக்களிடம் கையசைத்து, 3 நிமிடங்கள் வேனில் இருந்து இறங்கி நடந்தார். பட்டு வேட்டி, பட்டு சட்டையில் வந்த முதல்வருக்கு பூர்ண கும்ப மரியாதை வழங்கி வரவேற்பு தரப்பட்டது. சிப்காட் ரவுண்டானாவில், இரு பெண்கள் பூர்ண கும்ப மரியாதை செலுத்தி வரவேற்றனர்.

வேனில் இருந்து இறங்கிய முதல்வருக்கு, பொட்டு வைக்க திணறியதும், அவர்களது கையை பிடித்து, தனது நெற்றியில் வைத்து திலகமிட செய்தார். அங்கு முதல்வர் மீது பூக்களை துாவியும், துண்டுகளை வீசியும், விசிலடித்தும் மக்கள் மகிழ்ந்தனர். விவசாயி ஒருவர் மிகப்பெரிய வாழைக்கன்றையும், மற்றொரு விவசாயி இலையுடன் கூடிய மஞ்சள் கொத்தையும் பரிசாக வழங்கினார். அவற்றை ஆர்வமாக வாங்கிய முதல்வர், வேனுக்குள் வைத்து கொண்டார். சில இடங்களில் ஆரத்தி எடுத்த பெண்களுக்கு தலா, 500 ரூபாய் வழங்கினார். பறக்கவிடப்பட்ட துண்டு, மாலை, பூக்களை பாதுகாப்பு அலுவலர்கள் பிடித்து முதல்வரிடம் வழங்கினர்.

முன்னதாக, முதல்வர் பெருந்துறையில் நடந்த விழாவுக்கு வரும் வழியில், அத்திகடவு -–- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை இணைக்க வேண்டுமென, போராட்ட குழு கூட்டமைப்பினர், பெருமாநல்லுார் அருகே காத்திருந்து, முதல்வர் விஜயிடம் மனு அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us