ஹிஜாவு நிதி நிறுவன முகவர்கள் 100 பேர் வங்கி கணக்கு முடக்கம்
ஹிஜாவு நிதி நிறுவன முகவர்கள் 100 பேர் வங்கி கணக்கு முடக்கம்
ADDED : மார் 21, 2024 12:28 AM
சென்னை:ஹிஜாவு மோசடி நிதி நிறுவனத்தின் ஏஜன்டுகள், 100 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
சென்னை கீழ்ப்பாக்கத்தை தலைமையிடமாகவைத்து செயல்பட்டு வந்த, ஹிஜாவு நிதிநிறுவனம் வாயிலாக,முதலீட்டாளர்களிடம் இருந்து, 1,620 கோடி ரூபாய் மோசடிநடந்துள்ளது. இதுகுறித்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள், கமிட்டி உறுப்பினர்கள் என, 20 பேரை கைது செய்துள்ளனர்.
உதவி
முக்கிய குற்றவாளியான சென்னையைச் சேர்ந்த அலெக்சாண்டர் வெளிநாடு தப்பி உள்ளார். இவரை கைது செய்ய, சர்வதேச போலீசாரின் உதவி நாடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுதும்,இந்நிறுவனத்திற்கு, 500க்கும் மேற்பட்ட ஏஜன்டுகள் செயல்பட்டுள்ளனர். இவர்களுக்கு மோசடி நடப்பது தெரியும். எனினும் கமிஷன் தொகைக்காக முதலீட்டாளர்களை சேர்த்து விட்டுள்ளனர்.
ஒரு லட்சம் ரூபாய் முதலீடு பெற்று தந்தால், அதற்கு, 15,000 ரூபாய் வரை கமிஷன் பெற்றுஉள்ளனர்.
அதிக கமிஷன்
இப்படி கமிஷன் பெற்றஏஜன்டுகள் பட்டியல் தயாரித்து, இவர்களில் அதிகமாக கமிஷன் பெற்றுபயனடைந்த, 100 பேரின் வங்கி கணக்குகளை, பொருளாதார குற்றப்பிரிவுபோலீசார் நேற்று முடக்கி உள்ளனர்.

