தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ வேலை நிறுத்தம் வாபசானதால் வழக்கம் போல இயங்கிய வங்கிகள்

 வேலை நிறுத்தம் வாபசானதால் வழக்கம் போல இயங்கிய வங்கிகள்

 வேலை நிறுத்தம் வாபசானதால் வழக்கம் போல இயங்கிய வங்கிகள்


ADDED : செப் 29, 2026 03:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 03:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:நாடு முழுதும் நடக்க இருந்த மூன்று நாள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால், வங்கிகள் நேற்று வழக்கம்போல் இயங்கின.

'அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையிலான ஊதிய பாரபட்சத்தை களைய வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி சங்கங்கள் சார்பில், செப்., 28 முதல் 30 வரை, மூன்று நாட்கள் தொடர் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

அதோடு, வார இறுதி விடுமுறைகளும் சேர்ந்ததால், ஒன்பது நாட்கள் வரை வங்கிககள் முடங்கும் சூழல் உருவானது. இந்நிலையில், டில்லியில் நேற்று முன்தினம் நடந்த பேச்சில் இரு தரப்புகளுக்கும் இடையில், உடன்பாடு எட்டப்பட்டது.

அதைத் தொடர்ந்து, திட்டமிடப்பட்ட மூன்று நாள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக, வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன் காரணமாக, நேற்று வங்கிகள் வழக்கம்போல் இயங்கின.

அதே நேரம், வேலை நிறுத்தம் நடக்கும் என நம்பி, பலர் வெளியூர் சென்று விட்டதால், வங்கிகளில் ஊழியர் பற்றாக்குறை காணப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us