தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ எம்.எல்.ஏ.,வுடன் பேரம்; இடைத்தரகருக்கு 'லுக் அவுட்' நோட்டீஸ்

 எம்.எல்.ஏ.,வுடன் பேரம்; இடைத்தரகருக்கு 'லுக் அவுட்' நோட்டீஸ்

 எம்.எல்.ஏ.,வுடன் பேரம்; இடைத்தரகருக்கு 'லுக் அவுட்' நோட்டீஸ்


ADDED : ஜூலை 10, 2026 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2026 05:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: த.வெ.க., - எம்.எல்.ஏ.,வுக்கு, 35 கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசிய வழக்கில், சிங்கப்பூரில் பதுங்கியுள்ள இடைத்தரகருக்கு, சென்னை மாநகர போலீசார், 'லுக் அவுட் நோட்டீஸ்' வழங்கி உள்ளனர்.

சட்டசபையில் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத தீர்மானத்தில் ஓட்டளிக்க வேண்டும். இதற்கு, 35 கோடி ரூபாய் தருகிறோம் என, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங் கரை தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ., இளைய ராஜாவிடம், சிலர் பேரம் பேசி உள்ளனர்.

இது குறித்து, சென்னை திருவல்லிக் கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

அதன் தொடர்ச்சியாக, ஒன்பது பேரை கைது செய்தனர். தொடர் விசாரணையில், த.வெ.க., - எம்.எல்.ஏ.,விடம் பேரம் பேசிய விவகாரத்தில், இடைத்தரகர் லட்சுமண பெருமாள் என்பவர் சிங்கப்பூரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

அவர், ஈ.சி.ஆரில் உள்ள, நட்சத்திர ஹோட் டலில் தங்கி, திருநாவுக்கரசு உள்ளிட்டோரிடம் சேர்ந்து, சதி திட்டம் தீட்டி உள்ளார்.

தற்போது, சிங்கப்பூரில் இருந்தபடி, அந்த நட்சத்திர ஹோட்டலுக்கு லட்சுமண பெருமாள் மற்றும் அவரது கூட்டாளிகள் வந்து சென்ற போது பதிவான, 'சிசிடிவி' பதிவுகளை அழிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருவது, விசாரணையில் தெரியவந்துள்ளது.

தி.மு.க.,வை சேர்ந்த முக்கிய புள்ளிகள் உதவியுடன், சதிச்செயலில் ஈடுபட்டு இருப்பதால் திருவல்லிக்கேணி போலீசார் அவரை கைது செய்ய முடிவு செய்துள்ளனர்.

அவர் வேறு நாட்டிற்கு தப்பி செல்லாமல் இருக்கவும், இந்தியா வந்தால் கைது செய்யவும், 'லுக் அவுட் நோட்டீஸ்' வழங்கி உள்ளனர்.

செந்தில் பாலாஜி

ஆஜராகவில்லை

பேரம் பேசியது தொடர்பான வழக்கில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகியோருக்கு, சென்னை உயர் நீதிமன்றம், விசாரணை அதிகாரி முன், காலை மற்றும் மாலை கையெழுத்திட வேண்டும் என்ற, நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி உள்ளது. ஆனால், அவர்கள் நேற்று திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us