தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மனைப்பிரிவுகளில் அடிப்படை வசதிகளை 5 ஆண்டுகளுக்கு பராமரிக்க வேண்டும்: நில மேம்பாட்டு நிறுவனங்களுக்கு உத்தரவு

மனைப்பிரிவுகளில் அடிப்படை வசதிகளை 5 ஆண்டுகளுக்கு பராமரிக்க வேண்டும்: நில மேம்பாட்டு நிறுவனங்களுக்கு உத்தரவு

மனைப்பிரிவுகளில் அடிப்படை வசதிகளை 5 ஆண்டுகளுக்கு பராமரிக்க வேண்டும்: நில மேம்பாட்டு நிறுவனங்களுக்கு உத்தரவு


UPDATED : நவ 06, 2026 07:21 PM

ADDED : நவ 05, 2026 10:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:21 PM ADDED : நவ 05, 2026 10:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ‘புதிதாக உருவாக்கப்படும் மனைப் பிரிவுகளில் ஏற்படுத்தப்படும் அடிப்படை வசதிகளை, சம்பந்தப்பட்ட நில மேம்பாட்டு நிறுவனங்களே, ஐந்து ஆண்டுகளுக்குப் பராமரிக்க வேண்டும்’ என, பேரூராட்சிகள் இயக்குநர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

அவரது உத்தரவு:

புதிதாக மனைப்பிரிவுகளை உருவாக்கும்போது, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், ஒற்றைச் சாளர முறை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த விண்ணப்பங்களை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., நகர் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., அதிகாரிகள் பரிசீலனை செய்வர்.

உறுதி



இதில் சி.எம்.டி.ஏ., மற்றும் டி.டி.சி.பி., தொழில்நுட்ப அனுமதி கொடுத்த நிலையில், மனைப் பிரிவுக்கு அனுமதி அளிப்பது தொடர்பான பணிகளில், பேரூராட்சிகள் ஈடுபடலாம். சம்பந்தப்பட்ட திட்டத்தை கள ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளதா என உறுதி செய்ய வேண்டும்.

புதிய மனைப் பிரிவுகள் உருவாக்கும்போது, அங்கு சாலை, மழை நீர் வடிகால் போன்ற வசதிகளை, நில மேம்பாட்டு நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் அல்லது பேரூராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு உருவாக்கப்பட்ட அடிப்படை வசதிகளை பராமரிப்பதில், நில மேம்பாட்டு நிறுவனத்திற்கு முக்கிய பங்கு உள்ளது.

அந்த மனைப்பிரிவில், 60 சதவீத விற்பனை நிறைவு அல்லது உருவாக்கப்பட்டத்தில் இருந்து, ஐந்து ஆண்டுகளுக்கு பராமரிக்கும் பொறுப்பை, நில மேம்பாட்டு நிறுவனமே ஏற்க வேண்டும்.

இதில் ஐந்து ஆண்டு களுக்கு பராமரிப்பு பொறுப்பை ஏற்க முடியாத நிலை ஏற்பட்டால், அதற்கான தொகையை, பேரூராட்சிக்கு செலுத்த வேண்டும்.

பொறுப்பு



மனைப்பிரிவின் மொத்த பரப்பளவு, 1.07 லட்சம் சதுரடி அல்லது அதற்கு மேற்பட்டு இருந்தால், அங்கு, அடிப்படை வசதி களின் ஒரு பகுதியாக, 30 ஆயிரம் லிட்டருக்கு குறையாத கொள்ளளவுடன் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும்.

அதிலிருந்து, ஒவ்வொரு மனைக்கும், தண்ணீர் வினியோகிக்க குழாய் வசதி செய்வது நில மேம்பாட்டாளர் பொறுப்பு.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us