காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மிதமான மழைக்கு வாய்ப்பு!
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மிதமான மழைக்கு வாய்ப்பு!
ADDED : டிச 20, 2024 09:45 PM

சென்னை: வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாவது;
வங்கக்கடலில் தற்போது நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு வடகிழக்கே 370 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில இது, வடக்கு மற்றும் வடகிழக்கு திசை நோக்கி நகரக்கூடும்.
அதன் காரணமாக டிச.25ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு. அதிகாலையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையை பொறுத்தவரை ஆங்காங்கே மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வங்கக்கடலில் நிலவும் புயல்சின்னம் டிச.21ம் தேதி நெல்லூருக்கே கிழக்கே நிலை கொண்டு இருக்கும். ஆந்திர கடல்பகுதி மேல் உயரழுத்தம் இருப்பதால் புயல் சின்னம் வடக்கு நோக்கி நகர வாய்ப்பில்லை.
ஆகையால், மீண்டும் தமிழக கடற்கரை நோக்கி டிச.22ம் தேதி சென்னை அருகே வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.