சர்வதேச பயணியர் எண்ணிக்கை சென்னையை விஞ்சியது பெங்களூரு
சர்வதேச பயணியர் எண்ணிக்கை சென்னையை விஞ்சியது பெங்களூரு
ADDED : ஆக 02, 2025 01:49 AM
சென்னை,:நடப்பு நிதியாண்டில், மார்ச் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், அதிக சர்வதேச பயணியரை கையாண்ட விமான நிலையங்கள் வரிசையில், சென்னை நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, அரசால் நிர்வகிக்கப்படும் சென்னை விமான நிலையத்தை, தனியாரால் நிர்வகிக்கப்படும் கர்நாடக மாநிலம் பெங்களூரு சர்வதேச விமான நிலையம் முந்தி உள்ளது.
சர்வதேச விமான பயணியரை அதிக அளவில் கையாளும் விமான நிலையங்களில், டில்லி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மும்பை இரண்டாவது இடத்திலும்; பெங்களூரு மூன்றாமிடத்திலும்; சென்னை நான்காவது இடத்திலும் உள்ளன.
சென்னை விமான நிலையத்தில் இருந்து, சர்வதேச நகரங்களை இணைக்கும் விமானங்கள் போதிய அளவுக்கு இல்லாததால், சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்லும் பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
2025 ஏப்ரல் முதல் ஜூன் வரை
விமான நிலையம் பயணியர் அதிகரிப்பு
பெங்களூரு 17.33 லட்சம் 29%
சென்னை 15.64 லட்சம் 6%

