பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் தலைமையில் பண்டிகைகளுக்கு குழுக்கள் அமைப்பு
பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் தலைமையில் பண்டிகைகளுக்கு குழுக்கள் அமைப்பு
ADDED : செப் 13, 2025 01:04 AM
புதுடில்லி:டில்லியில் ராம்லீலா, துர்கா பூஜா போன்ற பண்டிகைகளை சிறப்பாக கொண்டாட குழுக்களை அமைத்து, முதல்வர் ரேகா குப்தா உத்தரவிட்டுள்ளார்.
சமூக நலத்துறை அமைச்சர் ரவீந்திரா இந்ராஜ் சிங் தலைமையிலான ராம் லீலா கமிட்டி அமைக்கப் பட்டுள்ளது.
அதுபோல, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்தா தலைமையில் துர்கா பூஜாவுக்கான கமிட்டி அமைக்கப் பட்டுள்ளது.
ராம் லீலா கமிட்டியின் உறுப்பினர்களாக பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் அசோக் கோயல், அனில் குமார் சர்மா, ஷியாம் சர்மா, சஞ்சய் கோயல் மறம்றும் சந்தீப் சரவத் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்.
அந்த குழுவின் உறுப் பினர் செயலராக டிவிஷனல் கமிஷனர் நீரஜ் செம்வால் நியமிக்கப் பட்டுள்ளார் .
அதுபோல, துர்கா பூஜாவை சிறப்பாக கொண்டாட பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் நீரஜ் பசோயா, ரவீந்திர நெகி, சந்தன் சவுத்ரி மற்றும் கர்நைல் சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்த குழுவின் உறுப்பினர் செயலராக டிவிஷனல் கமிஷனர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் இந்த விழாக்களை சிறப்பாக கொண்டாட தேவையான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்குவர். விழாவை ஒழுங்குற நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்வர்.
இந்த தகவலை, முதல்வர் ரேகா குப்தா கூறினார்.

