கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., விவகாரம்: விசாரிக்க பா.ஜ., வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., விவகாரம்: விசாரிக்க பா.ஜ., வலியுறுத்தல்
ADDED : நவ 14, 2026 10:15 PM
சென்னை: ‘கள்ளக்குறிச்சி த.வெ.க., – எம்.எல்.ஏ., விவகாரத்தில், சிறப்பு நீதிமன்றம் அமைத்து, விசாரணை நடத்த வேண்டும்’ என, பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கள்ளக்குறிச்சி த.வெ.க., – எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ், அம்மாவட்ட பெண் கலெக்டருக்கு வாட்ஸாப்பில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டின் மீது, முதல்வர் விஜய் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் எதுவும் நடக்கவில்லை என்கிறார்.
இந்த விவகாரத்தை கண்டித்து, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை தலைமையில், வரும் 18ம் தேதி, கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கள்ளக்குறிச்சி த.வெ.க., – எம்.எல்.ஏ., விவகாரம் குறித்து, சிறப்பு நீதிமன்றம் அமைத்து, விசாரிக்க வேண்டும். இல்லையெனில், உயர் நீதிமன்றமே இதை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும்.
தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் விஜய், குழந்தைகளுக்கு ‘கேக்’ ஊட்டி கொண்டிருக்கிறார். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டக் கூடாது என்பதே, தமிழக பா.ஜ.,வின் நிலைப்பாடு.
இவ்வாறு, அவர் கூறினார்.
