சீமானை பயன்படுத்திய பா.ஜ., ஈ.வெ.ரா., விமர்சன பின்னணி
சீமானை பயன்படுத்திய பா.ஜ., ஈ.வெ.ரா., விமர்சன பின்னணி
ADDED : பிப் 10, 2025 06:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பா.ஜ.,வால் ஈ.வெ.ரா.,வை நேரடியாக விமர்சனம் செய்ய முடியாது என்பதால், சீமானை பயன்படுத்தி, ஈ.வெ.ரா.,வை விமர்சனம் செய்துள்ளனர். சீமானும் அதற்கு பயன்பட்டுள்ளார். துவக்கத்தில், சீமானின் ஈ.வெ.ரா., விமர்சனத்தை ஆதரித்த பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தற்போது சீமான் ஓவராக பேசிவிட்டார் என்று கூறுகிறார்.
சீமானைப் போலவே, அண்ணாமலையும் மாற்றி மாற்றி பேசக்கூடியவர் தான். டில்லி தேர்தலில் இருந்து 'இண்டி' கூட்டணி படிப்பினை பெற்றுக் கொள்ள வேண்டும். மதவாதத்தை வீழ்த்த, தமிழகத்தில் கூட்டணிகள் உறுதியாக இருப்பது போல் இருந்திருந்தால், டில்லியில் பா.ஜ.,வை வீழ்த்தியிருக்கலாம். இதை இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் உணர வேண்டும். டில்லியில் பா.ஜ., பெற்றுள்ள வெற்றி தற்காலிகமானது தான்.
- முத்தரசன், மாநில செயலர், இந்திய கம்யூ.,

