வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை பா.ஜ., மீது துரை குற்றச்சாட்டு
வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை பா.ஜ., மீது துரை குற்றச்சாட்டு
ADDED : பிப் 23, 2024 02:45 AM

ராமநாதபுரம்: மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என ம.தி.மு.க., முதன்மை செயலாளர் துரை குற்றம்சாட்டினார்.
ராமநாதபுரத்தில் அவுர் கூறியதாவது: லோக்சபா தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்துள்ளது. ஒரு ராஜ்யசபா, இரு லோக்சபா தொகுதிகளை கேட்டுள்ளோம்.
வெளிநாடுகளில் இருந்து வாங்கி தமிழக ரேஷன் கடைகளில் பாமாயில் விற்கின்றனர். அதற்கு பதிலாக தமிழக விவசாயிகள் தயாரிக்கும் தேங்காய், கடலை, சூரியகாந்தி எண்ணெயை ரேஷன் கடைகளில் விற்க வேண்டும்.
மத்தியில் மோடி அரசு செயல்பாடு சரியில்லை. உரிமைக்காக போராடும் விவசாயிகளை தாக்குகின்றனர். மோடி அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை உள்ளது. மீனவர்களை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை.
இலங்கை அரசுக்கு இந்தியா பல்வேறு வகையில் உதவி செய்கிறது. அதை அந்த நாடு மறந்து விட்டது. லோக்சபா தேர்தலில் எங்கள் கூட்டணி 39 இடங்களிலும் வெற்றிபெறும் என்றார்.