குடியரசு தினத்தன்றும் மதுபானம் விற்பனை செய்த திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
குடியரசு தினத்தன்றும் மதுபானம் விற்பனை செய்த திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
ADDED : ஜன 27, 2026 06:53 PM

சென்னை: குடியரசு தினத்தன்றும் மதுபானத்தை தமிழக அரசு விற்பனை செய்ததாக தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை;
குடியரசு தின விழாவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு, ஜனவரி 25 தேதியே ரூ.220 கோடியே 75 லட்சம் மதிப்பிலான மதுவை விற்றதோடு நில்லாமல், ஜனவரி 26ம் தேதியும் சட்ட விரோதமாகப் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்துள்ளது திமுக அரசு.
கள்ளச் சாராயம் குடித்து பலர் பலியாவது ஒருபுறம் இருக்கையில், டாஸ்மாக் மதுவைக் குடித்து இறந்த சம்பவங்களும் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்நிலையில், கள்ளச் சந்தையில் மறைமுகமாக விற்கும் இத்தகைய மதுபானங்களைக் குடித்து, ஏதாவது உயிர் பலி ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது?
பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகம் விற்று அறிவாலயத்தின் கஜானாவை நிரப்பியது போதாதென்று, தற்போது தேர்தல் கைச்செலவுக்கு கல்லா கட்ட விடுமுறை நாட்களிலும் முறைகேடாக மது விற்பது முறையா?
இவ்வாறு அந்த அறிக்கையில் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.

