ADDED : ஜன 09, 2026 02:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக பா.ஜ., தொழில் வல்லுனர் பிரிவு சார்பில், நாளை காலை 10:00 மணிக்கு, 'வல்லுனர்கள் இணைப்பு -அறிவு தேசத்தை கட்டியெழுப்பும் சங்கமம்' என்ற நிகழ்ச்சி கோவையில் நடக்கிறது.
இதில், மத்திய அமைச்சர்கள் ஹர்தீப்சிங் பூரி, முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில், பா.ஜ., தேசிய செயல் தலைவர் நிதின் நபின் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
இதற்காக நாளை கோவை வரும் அவர், தமிழக பா.ஜ., மையக்குழு கூட்டத்திலும் கலந்து கொள்ள இருக்கிறார்.
தேசிய செயல் தலைவராக பதவியேற்ற பின், முதல் முறையாக தமிழக பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பங்கேற்பதால், தமிழக தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

