ADDED : ஜூலை 05, 2025 08:33 PM

புதுடில்லி:பூட்டிய வீட்டுக்குள் இறந்து கிடந்த, 'ஏசி' மெக்கானிக்குகள் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மயங்கிய நிலையில் கிடந்த மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தெற்கு டில்லியின் தக் ஷின்புரியில், 'ஏசி' மெக்கானிக்குகளான இம்ரான் என்ற சல்மான், மொஹ்சின், ஹசீப் உட்பட நான்கு பேர் அறை எடுத்து தங்கியிருந்தனர்.
பால்ஸ்வா டெய்ரியில் வசிக்கும் ஜிஷான், தன் சகோதரர் இம்ரானுக்கு மொபைல் போனில் நேற்று அழைத்தார். ஆனால், அழைப்பு ஏற்கப்படவில்லை. நீண்ட நேரம் ஆகியும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால், போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் வந்து அறைக் கதவை உடைத்து உள்ளே சென்றனர். உள்ளே மயங்கிக் கிடந்த நான்கு பேரை மீட்டு, சப்தர்ஜங் மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில், மூன்று பேர் ஏற்கனவே மரணம் அடைந்தது உறுதி செய்யப்பட்டது.
மயக்க நிலையில் இருந்த ஹசீப் என்பவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். மரணம் அடைந்ததில் இம்ரான் மற்றும் மொஹ்சின் மற்றும் அடையாளம் தெரிந்துள்ளது. மற்றொருவர் யார் என விசாரணை நடக்கிறது. விசாரணை நடக்கிறது.