தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/அருணாசலேஸ்வரர் கோவிலில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

அருணாசலேஸ்வரர் கோவிலில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

அருணாசலேஸ்வரர் கோவிலில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை


UPDATED : அக் 31, 2026 07:41 PM

ADDED : அக் 31, 2026 07:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2026 07:41 PM ADDED : அக் 31, 2026 07:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும், 15ம் தேதி தீப திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்காக விழா முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் இணைந்து தீவிரமாக நடத்தி வருகிறது.

விழா நடக்கும், 10 நாட்களும், காலை, மாலை, இரு வேளைகளிலும் சுவாமி வீதி உலா நடக்கும். ஏழாம் நாள் விழாவில் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்யர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேரில் வீதி உலா வருவர்.

விழாவினை காண பல்வேறு பகுதிகளிலிருந்து, 35 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவர். அவ்வாறு வரும் பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக கோவில் வளாகம், மாட வீதி, கிரிவலப்பாதை மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் என, பல்வேறு பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட ‘சி.சி.டி.வி’ கேமராக்கள் பொருத்தி, கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட உள்ளனர்.

இந்நிலையில், பாதுகாப்பு கருதி கோவில் வளாகம் மற்றும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வரும் தேர் ஆகியவற்றில், வெடிகுண்டு நிபுணர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us