'நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்.,' 'தினமலர்' நிகழ்ச்சிக்கு முன்பதிவு துவக்கம்
'நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்.,' 'தினமலர்' நிகழ்ச்சிக்கு முன்பதிவு துவக்கம்
ADDED : டிச 08, 2024 12:51 AM
சென்னை:'தினமலர்' நாளிதழ் மற்றும் வஜ்ஜிரம் அண்டு ரவி இன்ஸ்டிடியூட் சார்பில், 'நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்.,' என்ற பெயரில் மத்திய, மாநில அரசு பணிகளுக்கான போட்டி தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி, வரும் 14ம் தேதி, சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கிறது. இதில், பங்கேற்க விரும்புவோர் முன்பதிவு செய்யலாம்.
தமிழகத்தில் பெரும்பாலான பெற்றோர், தங்களின் குழந்தை நன்றாக படித்து, கலெக்டராக வேண்டும் என்று விரும்புகின்றனர்.
பட்டப்படிப்பு முடிக்கும் அனைவரும் யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் டி.என்.பி.எஸ்.சி., எனப்படும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற்று, அதிகாரமிக்க பதவிகளில் அமர வேண்டும் என்ற லட்சியத்துடன் உள்ளனர்.
யு.பி.எஸ்.சி., - டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளில், தமிழக இளைஞர்கள் தேர்ச்சி பெற, 'தினமலர்' நாளிதழ் மற்றும் வஜ்ஜிரம் அண்டு ரவி இன்ஸ்டிடியூட் பார் ஐ.ஏ.எஸ்., எக்ஸாமினேஷன் இணைந்து, 'நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்.,' என்ற நிகழ்ச்சியை, சென்னை கலைவாணர் அரங்கில் வரும், 14ம் தேதி நடத்துகின்றன.
காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் நிகழ்ச்சியில், அரசு பணியாளர் தேர்வுகளில் அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறவும், அரசு வேலைகளை பெறவும் வழிகாட்டப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி கே.அண்ணாமலை பங்கேற்கிறார்.
'சிவில் சர்வீசஸ் தேர்விற்கு தயாராவது எப்படி; விருப்ப தாள்களை தேர்வு செய்வது எப்படி, பிரிலிமினரி, மெயின் தேர்வு மற்றும் இன்டர்வியூவில் சாதிப்பது எப்படி? தேர்வில் வெற்றி பெற திட்டமிடுவது எப்படி என்பது உட்பட, பல ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர், செய்தியில் உள்ள, 'கியூஆர் கோடு'ஐ 'ஸ்கேன்' செய்து அல்லது 95667 77833 என்ற, 'வாட்ஸாப்' எண்ணுக்கு, 'ஐ.ஏ.எஸ்.,' என்று 'டைப்' செய்து அனுப்ப வேண்டும்.