தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஆக்கிரமிப்பை அகற்றியதற்கு லஞ்சம் வாங்கிய ஆர்.ஐ., கைது

ஆக்கிரமிப்பை அகற்றியதற்கு லஞ்சம் வாங்கிய ஆர்.ஐ., கைது

ஆக்கிரமிப்பை அகற்றியதற்கு லஞ்சம் வாங்கிய ஆர்.ஐ., கைது


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 09:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 09:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

எருமப்பட்டி: எருமப்பட்டி அருகே, ஆக்கிரமிப்பை அகற்றியதற்காக லஞ்சம் வாங்கிய அலங்காநத்தம் ஆர்.ஐ., கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி யூனியன், பாலப்பட்டியை சேர்ந்தவர் சந்திரசேகரன், 52. இவர், பாலப்பட்டியில் உள்ள பெரியசாமி கோவில் இடத்தில், ஆறுமுகம் என்பவர் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதால், அதை அகற்ற வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம், வருவாய்துறைக்கு கடந்த மார்ச் மாதம் ஆணை பிறப்பித்தது. இதையடுத்து, சேந்தமங்கலம் வருவாய்துறையினர் மற்றும் ஆர்.ஐ., வெண்ணந்துாரை சேர்ந்த ஜெயராமன், 40, ஆகியோர் கடந்த, 22ல் ஆக்கிரமிப்பை அகற்றியுள்ளனர்.

பின்னர், ஆர்.ஐ., ஜெயராமன், சந்திரசேகரனை தொடர்பு கொண்டு, ஆக்கிரமிப்பு அகற்றியதற்காக, 10 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளதால், அதை தர வேண்டும் என, கேட்டுள்ளார். பணம் கொடுக்க விரும்பாத சந்திரசேகரன், நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை சந்திரசேகரனிடம் கொடுத்தனர்.

நேற்று மாலை, சந்திரசேகரன், ஆர்.ஐ., ஜெயராமனிடம் பணத்தை கொடுத்தார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சுபாஷினி தலைமையிலான போலீசார், ஜெயராமனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us