ADDED : ஏப் 02, 2025 01:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சீனாவை சேர்ந்த மின்சார கார் உற்பத்தி செய்யும் நிறுவனம் பி.ஒய்.டி., தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில், 85,000 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைக்க இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிறுவனத்தின் முதலீட்டை தமிழகத்திற்கு ஈர்க்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என, எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தின.
இந்நிலையில், தெலுங்கானாவில் கார் உற்பத்தி ஆலை அமைக்க முதலீடு செய்ய இருப்பதாக வெளியான செய்திக்கு, பி.ஒய்.டி., நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளதாக, சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

