ADDED : பிப் 15, 2024 01:55 AM
சென்னை:''தமிழகத்தில், 117 நகரங்களில் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 32 நகரங்களில் பணி நடந்து வருகிறது,'' என அமைச்சர் வேலு தெரிவித்தார்.
சட்டசபையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் சின்னதுரை கேள்விக்கு, அமைச்சர் வேலு அளித்த பதில்:
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி நகர் பகுதிக்கு புறவழிச்சாலை அமைக்க, 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ், அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
விரைவில் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் துவக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றதும், நகர்ப்பகுதிகளுக்கு புறவழிச்சாலை அமைக்க உத்தரவிட்டதன் அடிப்படையில், 117 நகரங்களில் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இவற்றில், 50 புறவழிச்சாலைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது; 35 நகரங்களில் புறவழிச்சாலைக்கு நிலம் எடுக்கும் பணி நடந்து வருகிறது; 32 நகரங்களில் புறவழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

