ADDED : ஜன 23, 2025 12:13 AM

சென்னை:'ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் பயணியர், கேபின் லக்கேஜாக, 37 கிலோ வரை எடுத்து செல்லலாம்' என, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்' அறிவித்துள்ளது.
அந்நிறுவனம் அறிக்கை:
இதுவரை பயணியர், 'கேபின் லக்கேஜ்' ஆக, ஏழு கிலோ வரை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டது; இனி மொத்தம், 37 கிலோ வரை எடுத்து செல்லலாம். இந்த சலுகை, இந்தியாவில் இருந்து, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமன் மற்றும் சிங்கப்பூருக்கு இயக்கப்படும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு மட்டும் பொருந்தும்.
குடும்பமாக குழந்தைகளுடன் பயணிப்போர், 'செக் இன் பேக்கேஜ்' சலுகையாக, 47 கிலோ வரை, உடைமைகளை எடுத்துச் செல்லலாம். உடைமைகள் எதுவும் கொண்டு வர விரும்பாதவர்கள், 'எக்ஸ்பிரஸ் லைட்' என்ற வகுப்பை தேர்வு செய்து கொள்ளலாம். இது, பொதுவான கட்டணத்தை விட குறைவு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

