போதைப்பொருள் புழக்கம் தடுக்க சிறை காவலர் உடையில் கேமரா
போதைப்பொருள் புழக்கம் தடுக்க சிறை காவலர் உடையில் கேமரா
ADDED : மே 15, 2025 11:56 PM
சென்னை:சிறைகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவதால், கேமரா பொருத்திய உடை அணிந்த, 50 காவலர்கள் வழியே கண்காணிப்பு பணி நடக்கிறது.
இதுகுறித்து, சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாநிலம் முழுதும் உள்ள சிறைகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தி வருகிறோம். இப்பணிக்காக, 50 சிறை காவலர்களுக்கு, உடையில் பொருத்தக்கூடிய ரகசிய கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில், ஆடியோ மற்றும் வீடியோ காட்சிகள் பதிவாகும்.
இந்த கேமராக்கள், சென்னை எழும்பூரில் உள்ள சிறைத்துறை இயக்குநர் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டு உள்ளன. அங்கிருந்தபடி, சிறைகளில் பதிவாகும் காட்சிகளை, டிஜிட்டல் திரை வாயிலாக கூடுதல் டி.ஜி.பி., மகேஷ்வர் தயாள் கண்காணித்து வருகிறார். புதிதாக, 50 கேமராக்களும் வாங்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.