உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 20, 2026 11:05 PM
அ நிறம் | அளவு
சேலம்: செகந்திராபாதில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரயில், இன்று (நவ.,20) சேலம் வந்தது. அப்போது, சேலம் ரயில்வே போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், பொதுப்பெட்டியில் சோதனை செய்தனர்.
அதில், ‘லக்கேஜ்’ வைக்கும் இடத்தில், 2 பைகள் கேட்பாரற்ற நிலையில் கிடந்தன. திறந்து பார்த்தபோது, ‘டிராலி’ பேக்கில், 14 கிலோ கஞ்சா, மற்றொரு தோல் பையில், 13 கிலோ புகையிலை இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
