தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கார் மோதி விபத்து : ஏட்டு பலி

கார் மோதி விபத்து : ஏட்டு பலி

கார் மோதி விபத்து : ஏட்டு பலி

1


UPDATED : நவ 03, 2026 01:11 AM

ADDED : நவ 03, 2026 01:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2026 01:11 AM ADDED : நவ 03, 2026 01:06 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பள்ளிகொண்டா: வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா வழியாக சென்னை –- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வேலுார் நோக்கி நேற்று லாரி சென்றது. லாரியை சித்துாரை சேர்ந்த செல்லபதி, 38, ஓட்டினார்.

சின்ன கோவிந்தம்பாடி அருகே சென்றபோது, டூ – வீலரில் வந்த ராணிப்பேட்டை, ரயில்வே ஸ்டேஷன் பகுதியை சேர்ந்த சூர்யா, 28, லாரியின் பின்புறம் வேகமாக மோதி, சம்பவ இடத்திலேயே பலியானார்.

விபத்தால், அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை, சிறப்பு சப் – இன்ஸ்பெக்டர் பிரகலாதன், வாகன டிரைவர் தொண்டான் துளசியை சேர்ந்த ஏட்டு ரவிச்சந்திரன் ஆகியோர் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, பெங்களூரிருந்து வேலுார் நோக்கி வேகமாக வந்த கார், ரவிச்சந்திரன் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த ரவிச்சந்திரன், வேலுார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய விரிஞ்சிபுரம் கார் டிரைவர் மோகனவேலு மீது, பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us