ADDED : பிப் 10, 2025 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றதை, தமிழகம் முழுதும் பா.ஜ.,வினர் நேற்று முன்தினம் கொண்டாடி மகிழ்ந்தனர். திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், மத்திய பஸ் ஸ்டாண்ட் முன், பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடப்பட்டது.
போலீசார் அனுமதியின்றி, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கொண்டாடியதாக, பா.ஜ.,வினர் 50 பேர் மீது திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

