ADDED : ஜன 23, 2024 11:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், பிப்., 1ல் நடக்கிறது.
தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும்; 2023 ஜூன் முதல் தற்போது வரை, 90.6 டி.எம்.சி., நீரை வழங்காமல், கர்நாடகா நிலுவை வைத்துள்ளது.
இந்த நீர் கிடைத்தால், கோடைகால குடிநீர் தேவையையும், டெல்டா மாவட்ட பாசன தேவையையும் பூர்த்தி செய்ய முடியும். பிப்., 1ல் டில்லியில் நடக்கும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், நிலுவை நீரை திறந்து விட, கர்நாடாகாவுக்கு உத்தரவிடும்படி, தமிழகம் வலியுறுத்த உள்ளது.

