ஆன்லைனில் ரூ.350 கோடி மோசடி 7 மாநிலங்களில் சி.பி.ஐ., சோதனை
ஆன்லைனில் ரூ.350 கோடி மோசடி 7 மாநிலங்களில் சி.பி.ஐ., சோதனை
ADDED : ஜன 24, 2025 09:54 PM
சென்னை:அதிக வட்டி தருவதாக, 'ஆன்லைன்' வாயிலாக 350 கோடி ரூபாய் சுருட்டி, அதை, 'கிரிப்டோ கரன்சி'யாக மாற்றி மோசடி செய்தது தொடர்பாக, தமிழகம் உட்பட ஏழு மாநிலங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சமூக வலைதளம் வாயிலாக, முதலீடு செய்யும் தொகைக்கு அதிக வட்டி தருவதாக விளம்பரம் செய்து, ஆன்லைன் வாயிலாக 350 கோடி ரூபாய் சுருட்டிய சைபர் குற்றவாளிகள் ஏழு பேர் மீது, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த மோசடி குறித்து, டில்லி, ஜார்க்கண்ட், பஞ்சாப், ம.பி., குஜராத், ராஜஸ்தான், தமிழகம் என, ஏழு மாநிலங்களில், 10 இடங்களில் நேற்று சோதனை நடத்தினர்.
தமிழகத்தில் புதுக்கோட்டையில் நடத்தப்பட்ட சோதனையில், 34.20 லட்சம் ரூபாய், அமெரிக்க டாலர்கள், ஏழு மொபைல் போன்கள், மடிக்கணினி மற்றும் 'டிஜிட்டல்' ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.