ADDED : நவ 21, 2026 06:32 PM
சேலம்: சபரிமலை புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் வசதிக்கு, இன்று இரவு, 11:45 மணிக்கு தெலுங்கானா மாநிலம் சார்லபள்ளியில் புறப்படும் சிறப்பு ரயில், 24 காலை, 7:55 மணிக்கு கொல்லத்தை அடையும். 23 மாலை, 6:30 மணிக்கு ஜோலார்பேட்டை, இரவு, 8:10க்கு சேலம், 9:15க்கு ஈரோடு, 10:03க்கு திருப்பூர், 11:18க்கு போத்தனுாரில் நின்று செல்லும். மறுமார்க்க ரயில், 24 காலை, 10:55 மணிக்கு கொல்லத்தில் புறப்பட்டு, 25 இரவு, 7:00 மணிக்கு சார்லபள்ளியை அடையும்.
மாலை, 6:20க்கு போத்தனுார், இரவு, 7:18க்கு திருப்பூர், 8:20க்கு ஈரோடு, 9:27க்கு சேலம், 11:48க்கு ஜோலார்பேட்டையில் நின்று செல்லும். மேலும் நல்கொண்டா, மிரியாலகுடா, நதிகுடே, பிடுகுரல்லா, குண்டூர், தெனாலி, பாபட்லா, சிராலா, ஓங்கோல், நெல்லுார், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, திருவல்லா, செங்கன்னுார், மாவேலிக்கரை, காயங்குளம் ஆகிய ஸ்டேஷன்களில் நின்று செல்லும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
