பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு!
பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு!
ADDED : ஜன 22, 2025 07:29 AM

சென்னை: பாலியல் புகாரில் கைதான ஞானசேகரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை அண்ணா பல்கலை. மாணவி ஒருவர் பல்கலைக்கழக வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் தி.மு.க., அனுதாபி ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து விசாரிக்க 3 பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கொண்ட புலனாய்வுக் குழு நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரணை நடத்த புலனாய்வுக்குழு தாக்கல் செய்த மனுவை ஏற்ற நீதிமன்றம், 7 நாட்கள் விசாரணை நடத்த அனுமதி அளித்தது.
இதையடுத்து, ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் விசாரணையின் போது ஞானசேகரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, உடனடியாக அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.