திருமாவளவனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்
திருமாவளவனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்
ADDED : ஜன 02, 2025 01:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ஹிந்துக்களுக்கு எதிராக பேசியதாக வி.சி.க., தலைவர் திருமாவளவன் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.
கடந்த 2020ம் ஆண்டு நடந்த சர்வதேச கருத்தரங்களில் பேசிய திருமாவளவன், ஹிந்துக்களுக்கு எதிரான கருத்துக்களை கூறியதாக குற்றம்சாட்டப்பட்டது. எனவே, திருமாவளவனுக்கு எதிராக மதுரையைச் சேர்ந்த வேதா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணை பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற நிலையில், மனுஸ்மிருதி புத்தகத்தில் இருந்ததையே பேசியதாகவும், உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று திருமாவளவன் விளக்கம் கொடுத்திருந்தார்.
இதனை ஏற்ற நீதிபதி, திருமாவளவனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்வதாக அறிவித்தார்.

