வரவுக்குள் செலவு செய்ய மக்களுக்கு முதல்வர் அறிவுரை
வரவுக்குள் செலவு செய்ய மக்களுக்கு முதல்வர் அறிவுரை
ADDED : அக் 30, 2025 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 'ஆடம்பர செலவுகளை செய்யாமல், வரவுக்குள் செலவு செய்து சிக்கனமாக வாழ பழக வேண்டும்' என, உலக சிக்கன நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.
அவரது அறிக்கை:
ஆண்டுதோறும் அக்டோபர் 30ம் தேதி, உலக சிக்கன நாள் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் தம் வருவாயில், ஒரு பகுதியை சேமிக்க வேண்டும்.
அத்தகைய சேமிப்பும் பாதுகாப்பானதாக அமைய வேண்டும். ஒருவர் சேமிக்கும் தொகையானது, முதுமையில் நம்பிக்கையையும், பாதுகாப்பையும் அளிக்கிறது.
ஆடம்பர செலவுகளை செய்யாமல், வரவுக்குள் செலவு செய்து, சிக்கனமாக வாழ பழக வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

