மதுரையில் கவர்னர், முதல்வர் ; பலத்த போலீஸ் பாதுகாப்பு
மதுரையில் கவர்னர், முதல்வர் ; பலத்த போலீஸ் பாதுகாப்பு
UPDATED : மே 31, 2025 03:14 PM
ADDED : மே 31, 2025 05:18 AM

மதுரை: தமிழக கவர்னர் ரவியும், தமிழக முதல்வர் ஸ்டாலினும், இன்று (மே 31) மதுரையில் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து நேற்று காலை மதுரை வந்த கவர்னர் ரவி, ஓய்வுக்கு பின் மாலையில் ராமேஸ்வரம் சென்றார். இன்று அதிகாலை 5:25 மணிக்கு ராமநாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்கிறார். பின்னர் தனுஷ்கோடி சென்றுவிட்டு காலை 11:00 மணிக்கு மதுரை திரும்புகிறார். ரிங் ரோட்டில் உள்ள ஓட்டலில் ஓய்வு எடுத்த பின் மாலை 4:00 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்கிறார். இரவு 7:30 மணிக்கு சென்னை புறப்பட்டு செல்கிறார்.
அதேசமயம் நாளை நடக்கும் தி.மு.க., பொதுக்குழுக்கூட்டத்திற்காக இன்று மதியம் முதல்வர் ஸ்டாலினும் மதுரை வருகிறார். ஒரே நேரத்தில் முதல்வரும், கவர்னரும் மதுரையில் முகாமிட்டுள்ளதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் 'ரோடு ஷோ'
மதுரையில் இன்று (மே 31) மாலை முதல்வர் ஸ்டாலின் 'ரோடு ஷோ' நிகழ்ச்சியை
முன்னிட்டு அவர் ஒவ்வொரு பகுதியாக செல்லும் போது செய்யப்பட்டுள்ள
போக்குவரத்து மாற்றங்கள்.
பெருங்குடி சந்திப்பிலிருந்து 'ரோடு ஷோ'
நடக்கும் அவனியாபுரம், மருதுபாண்டியர் சிலை, பெரியார் சிலை, வில்லாபுரம்
ஆர்ச் வரையுள்ள ரோடு, ஜெயவிலாஸ் சந்திப்பு முதல் சோலையழகுபுரம்,
ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு, ஜீவாநகர் சந்திப்பு, சந்தரர்ராஜபுரம்
மார்க்கெட், டி.வி.எஸ்., நகர் மேம்பாலம், மாடக்குளம் சந்திப்பு,
ஜி.ஆர்.டி., ஓட்டல் ரோடு, பழங்காநத்தம், ரவுண்டானா, பைபாஸ் ரோடு, காளவாசல்
சந்திப்பு, குரு தியேட்டர் சந்திப்பு வரையுள்ள திண்டுக்கல் ரோடு, அகர்வால்
கண் மருத்துவமனை சந்திப்பு வரையுள்ள ரோடு, ஏ.ஏ.ரோடு, அரசரடி சிக்னல்
சந்திப்பு வரையுள்ள ரோடு, புதுஜெயில் ரோடு, முன்னாள் மேயர் முத்து சிலை வரை
இன்று காலை 6:00 மணி முதல் 'ரோடு ஷோ' முடியும் வரை எந்த ஒரு வாகனமும்
நிறுத்த அனுமதி இல்லை.