சிறு விளையாட்டு அரங்கங்கள் முதல்வர் ஸ்டாலின் திறந்துவைப்பு
சிறு விளையாட்டு அரங்கங்கள் முதல்வர் ஸ்டாலின் திறந்துவைப்பு
ADDED : ஆக 15, 2025 12:38 AM
சென்னை:நான்கு சட்டசபை தொகுதிகளில் கட்டப்பட்டுள்ள சிறு விளையாட்டு அரங்கங்களை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதி, திருவரங்குளம் கிராமத்தில், 6.42 ஏக்கர்; திருப்பத்துார் வாணியம்பாடி தொகுதியில் நிம்மியம்பட்டு கிராமத்தில், 6 ஏக்கர்; திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தொகுதியில் சிவன்மலை கிராமத்தில், 6.45 ஏக்கர் பரப்பளவில், தலா 3 கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் கட்டப்பட்டு உள்ளன.
தென்காசி மாவட்டம், பாட்டக்குறிச்சி கிராமத்தில், பல்வேறு வசதிகளுடன், 15 கோடி ரூபாய் செலவில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டப்பட்டுள்ளது.
சென்னை நேரு பூங்கா விளையாட்டு வளாகம், திருச்சி, மதுரை, கடலுார், திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு வளாகங்களில், 6.38 கோடி ரூபாய் செலவில் பாரா விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டு உள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், 60 பேர் தங்கும் வசதியுடன் ஹாக்கி விளையாட்டு முதன்மை நிலையம் கட்டப்பட்டு உள்ளது.
இவ்வாறு 37.3 கோடி ரூபாய் செலவிலான கட்டடங்களை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.