1,118 காவலர் குடியிருப்புகள் கட்ட முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
1,118 காவலர் குடியிருப்புகள் கட்ட முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
ADDED : மே 20, 2025 05:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில், 'மேன்ஷன் சைட்' என்ற இடத்தில், 380 கோடி ரூபாயில் 896; கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், 76.10 கோடி ரூபாயில் 222 என, மொத்தம், 1,118 காவலர் குடியிருப்புகள், 457 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ளன.
கோவை மத்திய சிறையில் இடநெருக்கடி நிலவுவதால், 'பிளிச்சி' என்ற இடத்தில், 211 கோடி ரூபாயில் ஆண்கள் சிறை, 111 சிறை காவலர் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இவற்றுக்கு, தலைமைச் செயலகத்தில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக முதல்வர் ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில், தலைமை செயலர் முருகானந்தம், உள்துறை செயலர் தீரஜ் குமார், டி.ஜி.பி., சங்கர் ஜிவால், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத் தலைவர் சைலேஷ் குமார், சிறைத்துறை இயக்குநர் மகேஷ்வர் தயாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.