நெல் சேமிப்பு வளாகங்கள் கட்ட முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
நெல் சேமிப்பு வளாகங்கள் கட்ட முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
ADDED : டிச 11, 2025 03:53 AM

சென்னை: தமிழகத்தில், 332.46 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ள, 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்களுக்கு, முதல்வர் ஸ்டாலின், நேற்று அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம்; நீலகிரி மாவட்டம் பந்தலுார்; திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்துார் தாலுகாக்களில், 7,000 டன் கொள்ளளவில், 13.97 கோடி ரூபாயில், மூன்று வட்ட செயல்முறை கிடங்கு கட்டப்பட்டு உள்ளது.
இவற்றை முதல்வர் ஸ்டாலின், நேற்று தலைமைச் செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே திறந்து வைத்தார்.
மேலும், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலுார், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில், 332.46 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ள, மேற்கூரை அமைப்புடன் கூடிய, 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்களுக்கு, முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வழியே, 376 நில அளவர்கள், 100 வரைவாளர்கள் பணியிடங்களுக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதற்கு அடையாளமாக, 10 பேருக்கு, தலைமைச் செயலகத்தில், பணி நியமன ஆணைகளை, முதல்வர் வழங்கினார்.

