குழந்தைகள் நலன் சேவைகள் விருது வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
குழந்தைகள் நலன் சேவைகள் விருது வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
ADDED : நவ 28, 2025 07:19 AM

சென்னை: சமூக நலத்துறை வாயிலாக, குழந்தைகள் நலன் சேவைகள் விருதுகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
'குழந்தைகளின் நலனை பேணி காப்பதற்காக திறம்பட செயலாற்றும் நிறுவனங்களை ஊக்குவிக்க, குழந்தைகள் நலன் சேவைகள் விருதுகள் வழங்கப்படும்' என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி யில், முதல்வர் ஸ்டாலின் விருது களை வழங்கினார்.
அரசு குழந்தைகள் இல்லம் பிரிவில், தஞ்சாவூர் அன்னை சத்யா நினைவு அரசினர் குழந்தைகள் இல்லம்; தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கீழ் செயல்படும் குழந்தைகள் இல்லம் பிரிவில், துாத்துக்குடி புனித மரியன்னை கருணை இல்லம்.
சட்டத்திற்கு முரணாக செயல்பட்டதாக கருதப்படும் குழந்தைகளுக்கான இல்லம் பிரிவில், சென்னை அரசினர் கூர்நோக்கு இல்லம்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு என்ற பிரிவில், ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றுக்கு, விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தலைமை செயலர் முருகானந்தம், சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை இயக்குனர் ஷில்பா பிரபாகர் ஆகியோர் பங்கேற்றனர்.

