பரபரப்பான சூழலில் முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு மதுரை பயணம்
பரபரப்பான சூழலில் முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு மதுரை பயணம்
ADDED : டிச 06, 2025 01:59 AM
சென்னை: தி ருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக, பரபரப்பான சூழ்நிலையில், முதல்வர் ஸ்டாலின், இன்று இரவு மதுரை செல்ல உள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில், குறிப்பிட்ட பகுதியில் தீபம் ஏற்ற வேண்டும் என, பா.ஜ., உள்ளிட்ட அமைப்புகள் குரல் எழுப்பி வருகின்றன. இது தொடர்பான, வழக்கில், உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவின்படி, குறிப்பிட்ட இடத்தில் தீபம் ஏற்ற, போலீசார் அனுமதிக்கவில்லை.
நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. மதுரை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு மதுரை செல்கிறார்.
மதுரை - தொண்டி சாலையில், நெடுஞ்சாலைத் துறை வாயிலாக, 150 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின், நாளை திறந்து வைக்க உள்ளார். அங்கு நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.

