ADDED : ஜன 25, 2025 03:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய இருந்த டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கான ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அனைத்து கட்சிகளும் இத்திட்டத்துக்கு எதிராக குரல் எழுப்பின. தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பிரிவு மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது. இதையடுத்து, சுரங்கத்துக்கான ஏலத்தை ரத்து செய்வது என்ற முடிவை எடுத்துள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் 'உங்கள் அன்பை ஏற்க நாளை #அரிட்டாபட்டி-க்கு வருகிறேன்! ' எனக்கூறியுள்ளார்.

