ADDED : அக் 09, 2025 01:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: முதல்வர் ஸ்டாலின் நாளை தன் குடும்பத்தினருடன் பெங்களூரு செல்கிறார்.
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் இன்று கோவை செல்கிறார் ; மாலை சென்னை திரும்புகிறார்.
முதல்வரின் மைத்துனர் செல்வம், கடந்த ஆண்டு இறந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது. அதையொட்டி, பெங்களூருவில் உள்ள செல்வம் வீட்டில் நடக்கும், நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின் நாளை குடும்பத்துடன் தனி விமானத்தில் பெங்களூரு செல்கிறார்.