ADDED : நவ 25, 2025 06:48 AM

சென்னை: முதல்வர் ஸ்டாலின், சென்னையில் இருந்து இன்று காலை விமானத்தில் கோவை செல்கிறார். அங்கு செம்மொழி பூங்காவை திறந்து வைக்கிறார்.
இதைத்தொடர்ந்து, தொழில் துறை சார்பில், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்வில் பங்கேற்கிறார்.
கோவையில் இரவு தங்கும் முதல்வர், நாளை ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில், பொல்லான் அரங்கை திறந்து வைக்கிறார்.
பின், அரசு விழாவில், 605 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைக்கிறார்; புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
இவ்விழாவில், 1.84 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
சித்தோடு ஆவின் பால் பண்ணை வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். நாளை இரவு, விமானம் வாயிலாக கோவையில் இருந்து சென்னை திரும்புகிறார்.

